/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு மைதானத்தை 'காணோம்' திட்ட அறிவிப்பு பலகை மட்டும்தான் இருக்கு

ADDED : ஆக 15, 2024 05:26 AM

பெண்ணாடம்: தமிழகம் முழுவதும் கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த, அனைத்து ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்களை அமைக்க கடந்த 2019ல் அப்போதைய அ.தி.மு.க., அரசு முடிவு செய்தது. இதற்காக சட்டசபையில் 110 விதியின் கீழ், ரூ. 65.35 கோடி மதிப்பில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சிகளில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தது.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கபடி, கைப்பந்து உள்ளிட்ட மைதானங்கள் என ரூ. 87 ஆயிரம் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் உபயோகமற்ற காலி இடங்களில் நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.
அதன்படி, நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த கொசப்பள்ளம் ஊராட்சி, பெரிய கொசப்பள்ளத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. போதிய பராமரிப்பின்றி உள்ளதால் தற்போது திட்ட அறிவிப்பு பலகைதான் மிச்சமாக உள்ளது. விளையாட்டு மைதானத்தை காணவில்லை.
மாவட்ட, ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.