/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
/
பெண்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
ADDED : மே 10, 2024 01:09 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெண்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.
சேத்தியாத்தோப்பு அடுத்த கூளாப்பாடி கிராமத்தில் குறை மின் அழுத்தம் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக தெரு குழாய்களில் தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த கூளாப்பாடி கிராம பெண்கள் நேற்று காலை 9:00 மணியளவில் காலிகுடங்களுடன் வீராணம் ஏரிக்கரை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் செய்ய முயன்றனர்.
தகவல் சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியல் செய்ய முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய அதிகாரிகளிடம் பேசி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.