/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தில்லைக்காளி கோவில் வைகாசி விழா துவக்கம்
/
தில்லைக்காளி கோவில் வைகாசி விழா துவக்கம்
ADDED : மே 29, 2024 05:11 AM
சிதம்பரம் : சிதம்பரம் தில்லைக்காளி கோவிலில் வைகாசி திருவிழா துவங்கியது.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று சூரிய பிரபையில் சாமி வீதியுலா நடந்தது. இன்று (29ம் தேதி) சந்திரபிரபை, 30ம் தேதி பூதகி வாகனத்திலும், 31ம் தேதி தெருவடைச்சான் வீதியுலா நடக்கிறது.
ஜூன் 4ம் தேதி தேர் திருவிழா, 5ம் தேதி சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரி, 7 ம் தேதி தெப்பல் உற்சவத்திற்கு பதிலாக அபிஷேக, ஆராதனை நடைபெற உள்ளது. 8ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், கோவில் செயல் அலுவவர் வேல்விழி செய்து வருகின்றனர்.