/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ADDED : மே 03, 2024 11:45 PM

கடலுார், - பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவில் பிரம்மோற்சவ தீமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கடலுார் அடுத்த பிள்ளையார்மேடு கிராமத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தீமிதி விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை அபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
நேற்று காலை சிறப்பு மகா அபிஷேகம், சுப்ரமணியர், வள்ளி, தெய்வாணை திருக்கல்யாணம் நடந்தது. மாலை தீமிதி விழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் பச்சையப்பன், ராமலிங்கம், சஞ்சய்காந்தி, மணி (எ) சுப்பிரமணியன், முருகேசன், பாஸ்கரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இன்று (4ம் தேதி) காலை 10:00 மணிக்கு அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, வீதியுலா, இரவு 9:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.