/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் நாளை தீர்த்தவாரி
/
பாடலீஸ்வரர் கோவிலில் நாளை தீர்த்தவாரி
ADDED : ஏப் 22, 2024 06:11 AM
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் வசந்த உற்சவம் விமர்சையாக நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான வசந்த உற்சவம் கடந்த 14ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மாலையில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கும், மனோன்மணி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்து வருகிறது.
மனோன்மணி மற்றும் ஸ்ரீ சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அக்ரஹார வீதியில் சுவாமி வீதியுலா நடக்கிறது. இதை தொடர்ந்து நாளை 23ம்தேதி சித்ரா பவுர்ணமியன்று தீர்த்தவாரி நடக்கிறது. மனோன்மணி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரசேகரருக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.

