
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் ராஜகோபாலசாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருக்கல்யாணம் நடந்தது.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி துவங்கியது. தினசரி பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு சாமி வீதியுலா நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மேல், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, பருவமழை பெய்யவும், உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.
சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நாளை வைகாசி உற்சவம் நிறைவு பெறுகிறது.