ADDED : ஜூன் 21, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதையொட்டி, நேற்று காலை 6:00 மணியளவில் சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, சுதர்சண ஹோமம் நடந்தது. மாலை 6:45 மணியளவில் தேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிர்மல்குமார், ஜனார்த்தனன் பட்டாட்சாரியார்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, ஊஞ்சல் சேவை, இரவு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை, திருமலை திருப்பதி ஆண்டாள் ரெங்கமன்னார் சபையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.