/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்டியாண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
/
குட்டியாண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
ADDED : ஆக 19, 2024 11:27 PM
கடலுார்: செல்லங்குப்பம் குட்டியாண்டவர் கோவிலில் இன்று மதியம் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கடலுார், செல்லங்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் கும்பாபிஷேக21ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று 20ம் தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கிறது.
அதனையொட்டி, இன்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, 108 சங்கு பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது .
தொடர்ந்து காலை 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், 11:00 மணிக்கு மகா தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.

