
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், செம்மண்டலம் டி.இ.எல்.சி. துவக்கப்பள்ளியில் திருக்குறள் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை இன்பராணி தலைமை தாங்கினார். ஆசிரியை நிர்மலா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கி பேசினார்.
செயலாளர் நடராஜன் வாழ்த்தி் பேசினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.