
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கி, பெண்கள் விழிப்புணர்வு குறித்து பேசினார்.
செயலாளர் நடராஜன் வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து, வினாடி - வினா போட்டி நடந்தது.
போட்டியை ஆசிரியர்கள் மீனாட்சி, கீதா, திருகுமரன், சிவப்பிரகாசம் ஒருங்கிணைப்பு செய்தனர்.