/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேட்டுக்குப்பம் பள்ளியில் திருக்குறள் விழா
/
மேட்டுக்குப்பம் பள்ளியில் திருக்குறள் விழா
ADDED : ஜூன் 14, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வடலுார் அடுத்த மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் திருக்குறள் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் திருப்பதி வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் அருள்மதி வரவேற்றார்.
ஆசிரியர்கள் தினேஷ், அலெக்ஸ் ஆகியோர் திருக்குறள் ஒப்பு வித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்தனர். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மாணவர்களிடையே திருக்குறள் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. செயலாளர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.