/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் திருக்குறள் ஒப்புவிக்கும் உலக சாதனை
/
அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் திருக்குறள் ஒப்புவிக்கும் உலக சாதனை
அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் திருக்குறள் ஒப்புவிக்கும் உலக சாதனை
அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் திருக்குறள் ஒப்புவிக்கும் உலக சாதனை
ADDED : ஜூலை 06, 2024 05:12 AM

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில், ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், செ.வெ.ரெக்கார்ட்ஸ் ேஹால்டர் போரம் இணைந்து 1330 திருக்குறளை 1330 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒப்புவிக்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி நிர்வாகி கஸ்துாரி சொக்கலிங்கம், பள்ளி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அதிகாரி சாந்தி, பொதுமறை திருக்குறள் பேரவை பொதுச்செயலாளர் அருள்ஜோதி சிறப்புரையாற்றினர். இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்போது, ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாளர் வெங்கடேசன், ஆல் இந்தியா குரூப்ஸ் செயலாளர் கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.