/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருமாவளவன் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
திருமாவளவன் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருமாவளவன் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருமாவளவன் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஆக 18, 2024 11:47 PM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வி.சி., மைய மாவட்டம் சார்பில் திருமாவளவன் எம்.பி., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் சுப்புஜோதி, திருஞானம், சக்திவேல், செல்வக்குமார், இளையபெருமாள், தென்றல் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். தொகுதி செயலாளர் ஐயாயிரம், ஆசிரியர் பாக்யராஜ், வழக்கறிஞர்கள் தனராஜ், மதுசூதனன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
விழாவில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நகர பொருளாளர்கள் முருகன், தனசேகர், மேட்டுக்காலனி வீரமணி, சதீஷ், கர்ணா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.