/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவருள் இறைபணி மன்றம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
/
திருவருள் இறைபணி மன்றம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருவருள் இறைபணி மன்றம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருவருள் இறைபணி மன்றம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
ADDED : ஆக 12, 2024 05:22 AM
புவனகிரி: புவனகிரி திருவருள் இறைபணி மன்றம் சார்பில் மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
புவனகிரி தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேவாங்கர் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னாள் துணைச் சேர்மன் ராம்குமார் வரவேற்றார். வசுமதி இறை வாழ்த்துப்பாடினார். ஓய்வு பெற்ற பேராசிரியர் உதயசூரியன் துவக்கவுரையாற்றினார்.
உணவு கலப்படம் உயிருக்கு உலைகளம் தலைப்பில் பூவராகவன், அழகப்பசெட்டியார் குறித்து ஓய்வு பெற்ற உதவி கல்வி அலுவலர் ராகவன் பேசினர். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் இராசமோகன்ராமானுஜதாசன் வாழ்த்திப் பேசினார்.
நடராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.