தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆத்மநாதர் கோவிலில் திருவாசக எழுத்து வேள்வி

ஆத்மநாதர் கோவிலில் திருவாசக எழுத்து வேள்வி

ஆத்மநாதர் கோவிலில் திருவாசக எழுத்து வேள்வி


ADDED : ஜூலை 25, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 04:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

  சிதம்பரம்:  ஆத்மநாதர் கோவிலில், திருவாசக எழுத்து வேள்வி நடைபெற்றது. 

  சிதம்பரம், வேங்கான் தெரு, திருப்பாற்கடல் மடத்தில் உள்ள ஆத்மநாதர் கோவிலில், மாணிக்க வாசக பெருமான் ‘திருவாசகத்தை’ சொல்ல, நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதியதாக ஐதீகம். 

  இதையொட்டி, நேற்று மாணிக்கவாசகர் பர்ணசாலையில், திருவாசகம் எழுத்து வேள்வி, நேற்று நடந்தது. இந்து ஆலய பாதுகாப்பு குழு தலைவர் செங்குட்டுவன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், ஆயிரத்துக்கும் சிவனடியார்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று திருவாசகம் எழுதினர். மேலும் பலர் திருவாசகம் படித்தனர்.  

   திருவண்ணாமலையை சேர்ந்த சிவனடியார் சிவக்குமார் ஏற்பாட்டின் பேரில், நேற்று, இதே நிகழ்வு, உலகம் முழுவதும், 22 நாடுகளில், ஒரே நேரத்தில் திருவாசகத்தின், 10 பாடல்கள் எழுதும் வேள்வி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.   

 நிகழ்வில், புலவர் கருணாநிதி, உமா, பாலசுப்பிரமணியன், வெங்கடேச தீட்சிதர்,  ஆசிரியர் அருணாசலம், சவுந்தரலட்சுமி, புவனகிரி ராஜாமணிகதர்சன் மற்றும் கோவில் நிர்வாகி பசவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

 முன்னதாக ஆத்மநாதர் மற்றும் குரு நமச்சிவாயர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us