/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகளுக்கு மிரட்டல் வைரலாகும் வீடியோ
/
அதிகாரிகளுக்கு மிரட்டல் வைரலாகும் வீடியோ
ADDED : ஆக 21, 2024 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்றில், கடந்த வாரம் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆலையின் தலைமை கரும்பு அலுவலர் அலுவலகத்தில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததுபோது, போதையில் உள்ளே நுழைந்த ஊழியர் ஒருவர், தலைமை பொறியாளரில் துவங்கி, அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டும் தோணியில் தாறுமாறாக பேசியுள்ளார்.
இதனை அங்கிருந்த அலுவலர் தனது மொபைலில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன்பிறகு, இப்பிரச்னை ஆலை ஆட்சியர் வரையில் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.

