என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியரை கத்தியால் குத்திய மூவர் கைது
என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியரை கத்தியால் குத்திய மூவர் கைது
UPDATED : ஆக 11, 2026 08:53 PM
ADDED : ஆக 11, 2026 08:51 PM
நெய்வேலி: என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியரை கத்தியால் குத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி, வட்டம் 3யை சேர்ந்தவர் சக்திவேல்,52; என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியரான இவர், ஆகஸ்ட் 10 இரவு, புதிய அனல்மின் நிலையம் அரகே உள்ள செக்போஸ்டில் பணியில் இருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், சக்திவேலை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை, போலீசார் ரோந்து சென்றபோது, வட்டம் 7 ல் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீசாரை கண்டதும், அங்கிருந்த மூவர் பதுங்கினர்.
சந்தேகமடைந்த போலீசார், மூவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் நெய்வேலி அடுத்துள்ள கைக்கேளார்குப்பம் தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கரியன் (எ) சரண்ராஜ்,28; தெற்கு இருப்பு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் சிலம்பு, 22; மற்றும் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21 ஐ சேர்ந்த ஷார்ப் (எ) சூர்யா,27; என்பதும், மூவரும் என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியர் சக்திவேலுவை கத்தியால் குத்தியது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
