ADDED : மே 21, 2026 06:12 PM
சேத்தியாத்தோப்பு: நெல் நடவு இயந்திரத்தை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் பண்ணவெளியை சேர்ந்தவர் வீரமணி, 50; இவர் தனக்கு, சொந்தமான நடவு இயந்திரத்தை வலசக்காட்டினை சேர்ந்த மதியழகன் என்பவரது வயலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடவு செய்துவிட்டு, இயந்திரத்தை அருகே உள்ள சண்முகம் நிலத்தில், உள்ள களத்தில் விட்டுவிட்டு வந்துளளார்.
இந்நிலையில் வீரமணி நேற்று முன்தினம் வலசக்காட்டில் நிறுத்தியுள்ள நடவு இயந்திரத்தை எடுத்துவர சென்றபோது காணவில்லை. இது குறித்து சோழத்தரம் போலீஸ் நிலையத்திலக புகார்கொடுத்தார்.
போலீசார் விசாரணையில், நடவு இயந்திரத்தை திருடியது, வலசக்காட்டினை சேர்ந்த ராஜா மகன் தமிழ்செல்வன், 23; ராஜமாணிக்கம் மகன் அறிவழகன், 26; கலியமூர்த்தி மகன் மாயகிருஷ்ணன், 39; என தெரிய வந்தது.
போலீசார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, கடந்த காலங்களில் திருடிய நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், வேன், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
