நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : அண்ணா விருது பெற்ற தலைமையாசிரியை அமுதா, அரசு பணியேற்ற வினோதினி ஆகியோருக்கு பாராட்டு விழா, உலக மகளிர் தின விழா என முப்பெரும் விழா நடந்தது.
திட்டக்குடி திருக்குறள் பேரவை சீனிவாசன் தலைமை தாங்கினார். பொருளாளர் முத்து ஜெயராமன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் அன்பானந்தன், குறள் அமுதம் முன்னிலை வகித்தனர். வாழ்நாள் உறுப்பினர் சுப்ரமணியன் கருத்துரையாற்றினார். பேரவைச் செயலாளர் பெரியசாமி சிறப்புரையாற்றினார். அலுவலக செயலாளர் கோபாலகிருஷ்ணன், காப்பாளர் திருநாவுக்கரசு, வாழ்நாள் உறுப்பினர் ஆறுமுகம், டாக்டர் செந்தில்குமார் பாராட்டுரை வழங்கினர். தலைமையாசிரியை அமுதா ஏற்புரையாற்றினார். வினோதினி நன்றி கூறினார்.