/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது
/
கடலுார் அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது
கடலுார் அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது
கடலுார் அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது
ADDED : ஆக 02, 2024 01:03 AM

பாகூர்: கடலுார் அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மநாபன்,48; அ.தி.மு.க., பிரமுகரான இவர் கடந்த 28ம் தேதி பாகூர் அடுத்த இருளஞ்சந்தை அருகே பைக்கில் சென்றபோது, காரில் வந்த கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பாகூர் போலீசார் வழக்கு பதிந்து இரு தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர்.
அதில், கடலுார் தானம் நகர் ஆட்டோ டிரைவர் பாஸ்கர் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், அவரது உறவினர் சேர்ந்து பத்மநாபனை சம்மட்டியால் அடித்து கொன்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக பாஸ்கரின் சகோதரர் அன்பு, 36 உள்ளிட்ட 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கு உடந்தையாக இருந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தானம் நகர் குரு,19; தண்டா முரளி,50; உளவு வேலை பார்த்த உள்ளேரிப்பட்டு அஜய்,22; ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பைக் மற்றும் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.