/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இந்த தேர்தலோடு தி.மு.க.,வை துாக்கி எறியுங்கள்: விருத்தாசலத்தில் அருண்மொழிதேவன் ஆவேசம்
/
இந்த தேர்தலோடு தி.மு.க.,வை துாக்கி எறியுங்கள்: விருத்தாசலத்தில் அருண்மொழிதேவன் ஆவேசம்
இந்த தேர்தலோடு தி.மு.க.,வை துாக்கி எறியுங்கள்: விருத்தாசலத்தில் அருண்மொழிதேவன் ஆவேசம்
இந்த தேர்தலோடு தி.மு.க.,வை துாக்கி எறியுங்கள்: விருத்தாசலத்தில் அருண்மொழிதேவன் ஆவேசம்
ADDED : ஏப் 17, 2024 11:32 PM

விருத்தாசலம் : 'கடலுார் தொகுதி வளர்ச்சி பெற சிவக்கொழுந்துவுக்கு முரசு சின்னத்தில் ஓட்டு போடுங்கள்' என விருத்தாசலத்தில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசினார்.
கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து விருத்தாசலத்தில் தனது இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசியதாவது: தமிழக ஏழை மக்கள் பசியாறும் வகையில் அம்மா உணவகம், மகளிருக்கு விலையில்லா ஸ்கூட்டி, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு விலையில்லா லேப் டாப், பஸ் பாஸ் உட்பட எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க., நிறைவேற்றியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகளை பாதுகாத்தவர் பழனிசாமி. ஆனால், தி.மு.க., ஆட்சியில் காய்கறி, மளிகை, பால், மின் கட்டணம், வீட்டு வரி, சொத்துவரி என விலைவாசி உயர்ந்து மக்கள் தவிக்கின்றனர். கடலுார் தொகுதி வளர்ச்சி பெற சிவக்கொழுந்துவுக்கு முரசு சின்னத்தில் ஓட்டு போடுங்கள்' என்றார்.
வேட்பாளர் சிவக்கொழுந்து பேசுகையில், 'கடலுாரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன், என்னை எளிதில் சந்திக்கலாம். விருத்தாசலம் தனி மாவட்டம், மகளிர் கல்லுாரி, பீங்கான் தொழிற்பேட்டையை புனரமைத்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். எனவே, முரசு சின்னத்தில் ஓட்டுபோட்டு வெற்றி பெற செய்யுங்கள்' என்றார்.
அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார், தொகுதி பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், அருளழகன், மண்டல செயலாளர் அருண், நகர தலைவர் தங்கராசு, துணை செயலாளர் அரங்கமணிவண்ணன், தே.மு.தி.க., மாவட்ட பொருளாளர் ராஜ், மாநில நிர்வாகிகள் வேல்முருகன், ரமேஷ், நகர செயலாளர் ராஜ்குமார், நகர தலைவர் சங்கர், பொருளாளர் கருணா உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் ரோடு ேஷா நடத்தினர்.

