ADDED : ஆக 29, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் திருவாதிரை நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் மூலவர், தாயார் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், திரவியப்பொடி ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 6:00 மணியளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.