/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேட்பாளர்களுக்கு வர்த்தக சங்கம் 'செக்' ; சிதம்பரம் தொகுதியில் அதிரடி
/
வேட்பாளர்களுக்கு வர்த்தக சங்கம் 'செக்' ; சிதம்பரம் தொகுதியில் அதிரடி
வேட்பாளர்களுக்கு வர்த்தக சங்கம் 'செக்' ; சிதம்பரம் தொகுதியில் அதிரடி
வேட்பாளர்களுக்கு வர்த்தக சங்கம் 'செக்' ; சிதம்பரம் தொகுதியில் அதிரடி
UPDATED : மார் 22, 2024 12:43 PM
ADDED : மார் 22, 2024 12:43 AM

சிதம்பரம் : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, பல்வேறு கோரிக்கைகளை, புத்தகமாக வெளியிட்டு சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர் அதிரடியில் இறங்கிப பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
தேர்தல் என்றாலே வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் அரசியல் கட்சியினர் சளைப்பதில்லை. அந்த வகையில், சிதம்பரம் தொகுதியில் சிட்டிங் எம்.பி., கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என, புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிதம்பம் வர்த்தக சங்கம் சார்பில், லோக்சபா தேர்தலையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினருக்குமான, கோரிக்கை அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.
வரத்தக சங்க தலைவர் சதீஷ்குமார் தலைமையில், செயலாளர் அப்துல் ரியாஸ், துணைத் தலைவர்கள் கணேஷ், வெங்கடசுரம், இளங்கோவன் மற்றும் உறுப்பினர்கள் செங்குட்டுவன், ராதாகிருஷ்ணன், ராஜகுமார் உள்ளிட்டோர், ஆலோசனை கூட்டம் நடத்தி, கோரிக்கை புத்தகத்தை வெளியிட்டனர்.
பத்து பக்கங்கள் கொண்டு அந்த புத்தகத்தில், வரி தொடர்பான வெளியிடப்படும் அறிக்கைகள் பிராந்திய மொழில் வெளியிட வேண்டும், பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.ட., வரம்புக்குள் கொண்டு வருவது, அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு, அனைத்து ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலும் விவசாய பொருட்களை பாதுகாக்க கூரைகள், நிலத்தடி நீர் மட்டம் உயர நதிகளை இணைப்பது, அனைத்து ஆறுகளிலும், செக் டேம் கட்டடுவது, சிதம்பரம் ரயில்வேவில், மீண்டும் பார்சல் சர்வீஸ் துவங்குவது, டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூடுவது, சிதம்பரத்தில் முதலை பண்ணை, சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த, அண்ணாமலை பல்கலைகழக விளையாட்டு மைதானத்தை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட 67 கோரிக்கைகள் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளிக்கும் வேட்பாளர்களுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஆதரவு தருவது எனவும் முடிவு செய்துள்ளனர்.
வர்த்தக சங்கத்தினரின் இந்த அதிரடி பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

