/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டையில் வர்த்தக சங்க கூட்டம்
/
பரங்கிப்பேட்டையில் வர்த்தக சங்க கூட்டம்
ADDED : ஏப் 28, 2024 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் நேற்று வட்டார தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகர வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர் சாலிஹ் மரைக்காயர் வரவேற்றார். பொருளாளர் அஷ்ரப் அலி, துணை செயலாளர் கவிமதி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மதுரையில், மே மாதம் 5ம் தேதி தொழில் வர்த்தக சங்க மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பங்கேற்கும் மாநாட்டில், பரங்கிப்பேட்டையில் இருந்து, அதிக வாகனங்களில் செல்வது என கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் யாசின், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் நன்றி கூறினார்.

