ADDED : செப் 05, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிதுரை,49; கொய்யா வியாபாரி. இவர் நேற்று காலை கடலுாருக்கு சென்று கொய்யாப் பழம் விற்பனை செய்துவிட்டு மதியம் 1:00 மணியளவில் மாளிகைமேடு மெயின்ரோட்டில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒறையூரில் இருந்து நெல்லிக்குப்பம் கரும்பு ஆலைக்கு 2 டிப்பரில் கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் மோதியதில் சாமிதுரை பலத்த காயமடைந்தார்.
உடன் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.