/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து தடை
/
பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து தடை
ADDED : மே 28, 2024 05:26 AM

கடலுார், : கடலுார் சண்முகம் தெருவில் கல்வெர்ட் பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
கடலுார் சண்முகம் தெரு, செம்மண்டலம் குண்டுசாலை தெருவில் துவங்கி அண்ணா மார்க்கெட் சாலையில் இணைகிறது. தற்போது கலெக்டர் அலுவலகம் மாற்றப்பட்ட பின் இந்த தெருவில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்த தெருவில் முருகர் கோவில் அருகே மழை நீர் தேங்கி வருவதால் கல்வெட்டு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதை சீரமைக்க 40 லட்ச ரூபாய் மதிப்பில் கல்வெர்ட் பாலம் கட்டுமானப்பணி துவங்கி நடந்து வருகிறது. பள்ளி திறப்பதற்கு முன்பு இந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் வேகமாக பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த சாலை வழியாக கார், லாரி போன்ற போக்குவரத்துகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. கல்வெர்ட் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.