/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் மீது ரயில் மோதல் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
/
பெண் மீது ரயில் மோதல் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
பெண் மீது ரயில் மோதல் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
பெண் மீது ரயில் மோதல் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
ADDED : மே 06, 2024 03:31 AM
நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பத்தில் தண்டவாளத்தின் குறுக்கே ரயில் நின்றதால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
கடலுாரில் இருந்து நேற்று காலை 10:00 மணிக்கு விழுப்புரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு அருகே ரயில் வருவதை பார்க்காமல் 55 வயது பெண் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ரயிலின் என்ஜின் மோதியதில் அந்த பெண் படுகாயமடைந்தார்.
இதனால் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தை கடந்து ரயில் தண்டவாளத்தின் குறக்கே ரயிலை நிறுத்தினார். பின் அங்கிருந்த பணியாளர்களிடம் விபத்து பற்றி விபரங்களை கூறி காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி அளிக்கும்படி கூறிவிட்டு ரயிலை எடுத்தார்.
இதனால் ரயில்வே கேட் மூடியிருந்ததால் காலை 10 மணி முதல் 10.30. மணி வரை ஆலை ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.
ரயில் புறப்பட்டு சென்ற பிறகு ரயில்வே கேட்டை திறந்த பிறகே போக்குவரத்து சரியானது. இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.