/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் பயணி தவறவிட்ட நகை, பணம் ஒப்படைப்பு
/
ரயில் பயணி தவறவிட்ட நகை, பணம் ஒப்படைப்பு
ADDED : ஆக 08, 2024 01:32 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நகை, பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை ரயில்வே எஸ்.பி., பாராட்டினார்.
திட்டக்குடி அடுத்த தீவளூரை சேர்ந்தவர் அருள்செல்வன், 27: இவர், கடந்த 6ம் தேதி இரவு 11:00 மணியளவில், மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் விருத்தாசலம் ரயில் நிலையம் வந்திறங்கினார். அங்கிருந்து ஆட்டோ மூலம் பஸ் நிலையம் சென்ற அவர், தனது டிராவல் பேக்கை ஆட்டோவிலேயே விட்டுச் சென்றார்.
ரயில் நிலையத்திற்கு வந்த ஆட்டோ டிரைவர் விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகரை சேர்ந்த உமேஷ், 38, ஆட்டோவில் இருந்த பேக்கை, விருத்தாசலம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில், தீவளூரை சேர்ந்த அருள்செல்வன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதில், 5 சவரன் நகை, 9,500 ரொக்கம் இருந்தது.
இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் உள்ளிட்ட போலீசார், அருள்செல்வனிடம் ஆட்டோ ஓட்டுனர் உமேஷ் முன்னிலையில் நகை, பணத்துடன் பேக்கை ஒப்படைத்தனர். தகவலறிந்த திருச்சி ரயில்வே எஸ்.பி., செந்தில்குமார், ஆட்டோ டிரைவர் உமேஷ் நேரில் வரவழைத்து பாராட்டி, அவருக்கு வெகுமதி வழங்கினார்.