/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் நிலையத்தில் பயிற்சி முகாம்
/
வேளாண் நிலையத்தில் பயிற்சி முகாம்
ADDED : ஆக 08, 2024 11:48 PM

விருத்தாசலம்,: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை வேளாண் குறித்து, 5 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமில், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பங்கேற்று, இயற்கை வேளாண்மை, இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், மண்வளத்தை மீட்டெடுத்தல், சுற்றுசூழல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, இடுபொருட்கள் தயாரித்தல், பாரம்பரிய விதைகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
மேலும், ஒருங்கிணைந்த பண்ணையில், ஆடு, மாடு, வாத்து பலபயிர் சாகுபடி செய்வது குறித்து நேரடியாக மாதிரி பண்ணையில் காண்பிக்கப்பட்டது.
பயிற்சி முகாமில், ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்தை சேர்ந்த மகளிர் சமுதாய களபயிற்றுனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கபயனாளிகள் பலர் பங்கேற்றனர்.