/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
/
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 01, 2024 07:01 AM
திட்டக்குடி: திட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் அமுதா வரவேற்றார். தன்னார்வலர்களுக்கு மையங்களை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான அறிவுரைகள் மற்றும் தமிழ், ஆங்கிலம், கணக்கு என பாடவாரியாக பயிற்சி வழங்கப்பட்டது.
ஆசிரியப் பயிற்றுநர்கள் கிருஷ்ணமூர்த்தி, மதியழகன், ராஜ்குமார், பார்த்திபன், பள்ளி ஆசிரியர் வெற்றிவேந்தன் ஆகியோர் ஸ்மார்ட் போர்டு மூலம் பயிற்சி அளித்தனர். நுாற்றுக்கும் மேற்பட்ட இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது.
இல்லம் தேடிக்கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் வழியரசன் நன்றி கூறினார்.