/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
/
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 02, 2024 10:20 PM

விருத்தாசலம், - விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை வட்டார வளமைய அலுவலகத்தில், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு இரண்டாம் கட்டபயிற்சி நடந்தது.
பயிற்சியை,வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
மாவட்டதொடக்க கல்வி அலுவலர் சேகர், கலந்துகொண்டு, தன்னார்வலர்களிடம் பயிற்சி சார்ந்த கருத்துகளை பேசி கையேடு வழங்கினார்.
இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பயிற்றுநர் நாராயணசாமி செய்திருந்தார்.
பயிற்சியில்,ஆசிரியர் பயிற்றுநர்கள் சரிதா, கவிதா, வரதராஜபெருமாள்ஆகியோர் கலந்து கொண்டு, தன்னார்வர்களுக்கு கருத்துகளை வழங்கினர்.இதில், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர்.