/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம்
/
கடலுார் தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம்
கடலுார் தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம்
கடலுார் தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம்
ADDED : மார் 25, 2024 05:40 AM

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
தமிழகத்தில் வரும் ஏப்., 19ம் தேதி லோக் சபா தேர்தல் நடக்கிறது. இதற்காக, கடலுார் லோக் சபா தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது.
அதன்படி, கடலுார் மஞ்சக்குப்பம் அரசு நிதி உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், கடலுார் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. இதில் மகளிர் சுய உதவிக் குழுவினர், இல்லம் தேடி கல்வி ஊழியர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது, கடலுார் சட்டசபை தொகுதியை சேர்ந்த 1636 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அபிநயா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் பலராமன், தேர்தல் துணை தாசில்தார் சந்திரன், வி.ஏ.ஓ., ஜெயராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

