ADDED : மார் 28, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கான முதல் சுற்று பணியிடை பயிற்சி வடலுாரில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பழனி தலைமை தாங்கினார். துணை முதல்வர் அமுதா முன்னிலை வகித்தார். கருத்தாளர்கள் நல்லமுத்து, அனந்தபத்மநாபன், சுஜாதாதேவி, தமிழ்ச்செல்வி, சுபத்ரா, பாஸ்கர், செல்வி பிரியதர்ஷினி, வித்யா, நளினி பயிற்சி அளித்தனர்.
43 ஆய்வ உதவியாளர்கள் பங்கேற்றனர். ஆய்வகங்களை திறம்பட பராமரித்தல், பதிவேடுகளை கையாளுதல், ஆய்வக பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பூபதி நன்றி கூறினார்.

