ADDED : ஜூன் 24, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: டிரான்ஸ்பார்மரை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட கலிஞ்சிக்குப்பம் சாலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் இரவில் மர்ம நபர்கள், அந்த டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை திருடி சென்றனர்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
