/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து பணியாளர்கள் சங்கம் மூன்று நாட்கள் போராட்டம் அறிவிப்பு
/
போக்குவரத்து பணியாளர்கள் சங்கம் மூன்று நாட்கள் போராட்டம் அறிவிப்பு
போக்குவரத்து பணியாளர்கள் சங்கம் மூன்று நாட்கள் போராட்டம் அறிவிப்பு
போக்குவரத்து பணியாளர்கள் சங்கம் மூன்று நாட்கள் போராட்டம் அறிவிப்பு
ADDED : ஆக 18, 2024 11:45 PM

கடலுார்: காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வரும் 2ம் தேதி முதல் மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
கடலுாரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
போக்குவரத்துறை துறையில் 1300க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலர் பணியில் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு பட்டியல் தயாராக இருந்தும் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் வழங்கப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்2ம் தேதி மாநில அளவில் அனைத்து அலுவலகங்களிலும் ஒரு மணி நேரம் அனுமதி எடுத்து போராட்டமும், 3ம் தேதி மாநில முழுதும் அனைத்து பணியாளர்களும் அரை நாள் விடுப்பு எடுத்து போராட்டமும், 4ம்தேதி ஒட்டுமொத்தமாக உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு தனி கவனம் செலுத்தி எங்கள் கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.