/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருக்குளம் ஆக்கிரமிப்பு தனி தாசில்தார் ஆய்வு
/
திருக்குளம் ஆக்கிரமிப்பு தனி தாசில்தார் ஆய்வு
ADDED : மே 26, 2024 05:43 AM
திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆலய நிலங்கள் தனி தாசில்தார் ஆய்வு செய்தார்.
திட்டக்குடி, அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலுக்குச் சொந்தமான திருக்குளத்தைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் 2 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது.
அதில் படித்துறைக்கு எதிரே உள்ள பகுதியும் திருக்குளத்தைச் சேர்ந்த பகுதியை தவறுதலாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சிவனடியார்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் ஆலய நிலங்கள் தனி தாசில்தார் செந்தில்வேல், நேற்று முன்தினம் திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து சிவனடியார்கள் கூறுகையில், திருக்குளத்திற்கும், கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியும் கோவில் சொத்தாகும். அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறையிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். அதிகாரிகள் ஆய்வுக்குப்பின் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்' என்றனர்.