ADDED : மே 13, 2026 04:20 PM
பண்ருட்டி: நிலத்தகராறில் தம்பதியை தாக்கிய வழக்கில் 3 பேர் மீது வழக்குபதிந்து இருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்,56; விவசாயி; இவரது மனைவி சுசிலா,50; இந்த இருவரும், கடந்த, 10 ம் தேதி நிலத்தில் முந்திரி கொட்டை சேகரித்துக் கொண்டிருந்த போது அங்கு சுசிலாவின் அண்ணன் பெருமாள் மற்றும் அவரது மகன்கள் கபிலன் 19; கவுதம்,23; ஆகிய 3 பேரும் வந்தனர். அவர்கள், குமார் மற்றும் சுசிலாவிடம் தகராறு செய்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த குமார் , அவரது மனைவி சுசிலா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கபிலன்,19; கவுதம்,23; ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவான பெருமாளை தேடி வருகின்றனர்.
