ADDED : ஜூன் 24, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அரசக்குழி மேட்டுதெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ், 37; விருத்தாசலம் புதுப்பேட்டையைச் சேர்ந்த சேகர், 39 ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 14 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.