ADDED : ஆக 08, 2024 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றின் கரையில் உள்ள கஸ்டம்ஸ் சாலையில் சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பண்ருட்டியை சேர்ந்த அப்துல்லா மகன் சுலைமான்,24, மேல்பட்டாம்பாக்கம் ஜாகீர்உசேன் மகன் அபுபக்கர்சித்திக், 25; ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக் மற்றும் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.