தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : ஜூலை 05, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: குறவன்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் இளவழகி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அங்கு பைக்கில் நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்த போது கஞ்சா விற்பது தெரியவந்தது.

விசாரணையில் குறவன்குப்பம் பகுதியை சேர்ந்த மோகனசுப்பிரமணியம் மகன் சிவகுரு, 26; முருகன் மகன் அரவிந்த், 26; என தெரியவந்தது. மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us