தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குட்கா விற்பனை இருவர் கைது

குட்கா விற்பனை இருவர் கைது

குட்கா விற்பனை இருவர் கைது


ADDED : மே 12, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடமாடும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியை சேர்ந்தவர் பாவாடைராயன் மகன் செந்தமிழ்ச்செல்வன், 24. ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் ரசூல் மகன் பரூக்அலி, 55. இருவரும் நடமாடும் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ரகசிய தகவலின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு தலைமையிலான போலீசார் நேற்று மாலை இருவரையும் தனித்தனியே மடக்கிப் பிடித்து, அவர்களிடம் இருந்து தலா 15 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, செந்தமிழ்ச்செல்வன், பரூக்அலி இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us