ADDED : ஆக 04, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் டாஸ்மாக் மது விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் எஸ்.பி., சிறப்பு படை போலீசார் ரோந்து சென்றனர். வடக்குவெள்ளூர் பகுதியை சேர்ந்த ஜோதி, 62, மற்றும் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த செல்வம், 48 ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தனர். இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து, மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜோதி, செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.