/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலி
/
பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலி
ADDED : ஆக 23, 2024 01:03 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளுமேடு கிராமம் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் முகமது அன்சாரி, 49. இவர் அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். அதே பகுதி கூபா தெருவில் வசிப்பவர் அப்துல் அலீம்,47.
இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் பகுதிக்கு சென்று விட்டு, நேற்று மாலை ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பைக்கை முகமது அன்சாரி ஓட்டினார். காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வீரானந்தபுரம் பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார், பைக் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் துாக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே முகமது அன்சாரி இறந்தார்.
பலத்த காயமடைந்த அப்துல் அலீமை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிசிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அப்துல் அலீம் இறந்தார். விபத்து ஏற்படுத்திய கார் குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

