/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எடையூர் - பெரம்பலுார் சாலை 'கந்தல்'
/
எடையூர் - பெரம்பலுார் சாலை 'கந்தல்'
ADDED : ஆக 23, 2024 12:26 AM

பெண்ணாடம் : குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற எடையூர் - பெரம்பலுார் தார் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த எடையூர் - பெரம்பலுார் தார் சாலையை பயன்படுத்தி கோவிலுார், சிறுமங்கலம், மதுரவல்லி, நரசிங்கமங்கலம், எரப்பாவூர், அருகேரி, கொத்தட்டை, பெரம்பலுார், கொடுக்கூர், பரவளூர், தொரவளூர் உட்பட பல கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு விருத்தாசலம், பெண்ணாடம், வேப்பூர், நல்லுார் பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைவதுடன், வாகனங்களின் டயர்கள் பஞ்சராவதால் வாகன ஓட்டிகள் அவதியடைவது தொடர்கிறது.
எனவே, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற எடையூர் - பெரம்பலுார் தார் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.