/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சக்ராலயா மோட்டார்சில் 'அல்ட்ராஸ் ரேசர்' கார் அறிமுகம்
/
கடலுார் சக்ராலயா மோட்டார்சில் 'அல்ட்ராஸ் ரேசர்' கார் அறிமுகம்
கடலுார் சக்ராலயா மோட்டார்சில் 'அல்ட்ராஸ் ரேசர்' கார் அறிமுகம்
கடலுார் சக்ராலயா மோட்டார்சில் 'அல்ட்ராஸ் ரேசர்' கார் அறிமுகம்
ADDED : ஜூன் 09, 2024 03:09 AM

கடலுார், : டாடா மோட்டார்சின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான கடலுார் சக்ராலயா மோட்டார்சில் டாடா நிறுவனத்தின் 'அல்ட்ராஸ் ரேசர்' புதிய கார் அறிமுக விழா நடந்தது.
சக்ராலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் துரைராஜ் தலைமை தாங்கினார். சர்வீஸ் பொது மேலாளர் செல்வம், கடலுார் விற்பனை பிரிவு துணைப் பொது மேலாளர் சோழன் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர் முன்னாள் ஒன்றியக்குழு சேர்மன் தாமரைக்கண்ணன் புதிய காரை அறிமுகப்படுத்தினார். துணை மேயர் தாமரைச்செல்வன், டாக்டர் இளந்திரையன் வாழ்த்தி பேசினர்.
விழாவில் கபிலன், மனித வள மேம்பாட்டு பிரிவு பொது மேலாளர் ஜெயக்குமார், வசந்த், பைனான்ஸ் பிரிவு பொது மேலாளர் குரு பிரசாத், ஊழியர்கள் அஷ்வின், திவ்யா, சதீஷ், அன்பொளி ஆப்டிக்கல் உரிமையாளர் ஜெய்சீத்தாராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் துணைப் பொது மேலாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.
புதிய கார் குறித்து சக்ராலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் துரைராஜ் கூறுகையில், 'கார் இன்ஜின் 120 ெஹச்.பி., திறன் கொண்டது. 5 பேர் பயணிக்கலாம். 16 இன்ச் அலைவ் வீல், 10.25 டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா, 7 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் மீட்டர், வெண்டிலேட்டர் 'ஏசி' போன்ற வசதிகள் உள்ளது. கார் ஆரம்ப விலை 11.35 லட்சம் ரூபாய். 4 வண்ணங்களில் கார் கிடைக்கிறது. 1 லிட்டர் பெட்ரோலுக்கு 20 கி.மீ., வரை பயணிக்கலாம்' என்றார்.