/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்
/
ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 10, 2024 05:44 AM

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மா.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், வி.சி., கட்சி நாடாளுமன்ற பொறுப்பாளர் திருமார்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் கண்டன உரையாற்றினர். இதில், மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட அம்சங்களை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, ஒன்றிய செயலாளர் வைத்தி, அனைத்து பொது நல அமைப்பின் செயலாளர் ரவி, தனியார் பஸ் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தலைவர் குருராமலிங்கம், மீனவர் பேரவை தலைவர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.