/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பல்கலை., ஊழியர்கள் தேர்தல் புறக்கணிப்பு 'வாபஸ்'
/
பல்கலை., ஊழியர்கள் தேர்தல் புறக்கணிப்பு 'வாபஸ்'
ADDED : ஏப் 03, 2024 11:02 PM
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்கள் அறிவித்த, தேர்தல் புறக்கணிப்பு, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டது.
அண்ணாமலை பல்கலைகழக ஊழியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் எம்.பி., தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முடிவு செய்து, உயர்கல்வித்துறை செயலருக்கு கடிதம் அனுப்பினர். அதையடுத்து, நேற்று துணைவேந்தர் கதிரேசன், பதிவாளர் சிங்காரவேலு ஆகியோர், பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ரவி, பொதுச் செயாளர் கோவிந்தராஜன், பொருளாளர் தியாகராஜன் உள்ளி்ட்டோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன், மாதம் முதல் வாரம் வரை இருப்பதால், ஜூன் மாதம் நடைபெறும் நிதிக்குழு மற்றும் ஆட்சிமன்ற கூட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நேற்று மாலை ஊழியர் சங்க நிர்வாகக் குழு கூட்டம் கூட்டி, தேர்தல் புறக்கணிப்பை, கைவிடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

