/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கவனிக்கப்படாமல் 'கண்காணிப்பு கேமராக்கள்'; சேத்தியாத்தோப்பில் காட்சி பொருளானது

ADDED : ஆக 14, 2024 05:51 AM

சேத்தியாத்தோப்பில், 2015ம் ஆண்டு வர்த்தகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள்மற்றும் போலீசார் பங்களிப்புடன் கடைவீதி, பஸ் நிலையம், ராஜீவ் சிலை சந்திப்பு, குறுக்கு ரோடு, நான்கு முனை சந்திப்பு, சந்தைத்தோப்பு செல்லும் சாலை முகப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடையாளம் காணும் நோக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பெரும்பாலானவை பழுதடைந்து, காட்சி பொருளாக மாறியுள்ளது.சேத்தியாத்தோப்பில் விழாக்காலங்கள், சந்தை நாட்களில் வெளியூர், சுற்று வட்ட கிராம மக்கள் பல ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர்.
கூட்ட நெரிசல் நாட்களில் ஏற்படும் திருட்டு சம்பவங்கள், இருசக்கர வாகனங்கள் திருட்டு ஆகியவைகளை கண்காணிப்பு கேமராக்கள் பழுதால் போலீசார் பதிவுகளை எடுத்து கண்டு பிடிக்கமுடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
கேமராக்கள் பொருத்தப்பட்ட 10 ஆண்டுகளில் போதிய பராமரிப்புகள் இல்லாததால் கடைவீதி, ராஜீவ் சிலை, பஸ் நிலையம், சந்தைத்தோப்பு செல்லும் சாலை முகப்பு, குறுக்ரோட்டில் நான்கில் இரண்டு மட்டுமே இயங்குகிறது.
எனவே பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கி இயக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.