/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதுகாப்பற்ற நிலையில் கழிவுநீர் வடிகால்
/
பாதுகாப்பற்ற நிலையில் கழிவுநீர் வடிகால்
ADDED : மே 24, 2024 05:32 AM

கடலுார: கடலுாரில் கழிவுநீர் வாய்க்காலில் சிலாப்கள் இல்லாததால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் சென்றுவரும் நிலை உள்ளது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி சாலையில் உள்ள அண்ணாமலை நகரில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. இதையடுத்து, வாய்க்கால் மேல் பகுதியில் சிலாப் போட்டு மூடப்படாமல் திறந்தவெளியாக கிடக்கிறது.
இதனால், குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், வாய்க்காலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் குவிந்து கிடக்கிறது.
எனவே, வாய்க்கால் மேல்பகுதியில் சிலாப் போட்டு மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.