ADDED : ஆக 12, 2024 05:43 AM

சிதம்பரம்: சிதம்பரம் அரசு ஆரம்ப சுகதார நிலையம் சார்பில் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடந்தது.
சிதம்பரம் வீனஸ் பள்ளியில், சிதம்பரம் அரசு ஆரம்ப சுகதார நிலையம் சார்பில், பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதில் 5 வயது குழந்தைகளுக்கு, கக்குவான் தடுப்பூசியும், 10 மற்றும் 16 வயது மாணவ, மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் தடுப்பூசியும் போடப்பட்டது.
முகாமை பள்ளி தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துணை தாளாளர் ரூபியால்ராணி முன்னிலை வகித்தார். முதல்வர் நரேந்திரன், சுகாதார ஆசிரியை சுகுணா உள்ளிட்டோர் உடன் இருந்து, மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டு, உடனிருந்து பெற்றோருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர். செவிலியர்கள் பகுதி நேர செவிலியர் சர்மிளா, நுகர்ப்புற சுகதார செவிலியர் கனிமொழி மற்றும் குழுவினர் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.